இது தெரியுமா ? ‘கேம் சேஞ்சர்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய்யாம்..!

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய படம் கேம் ஜேஞ்சர். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாகியது.இந்நிலையில், இந்த படத்தில் தளபதி விஜய் தான் முதலில் நடிக்க இருந்ததாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் அந்தணன், கொரோனா காலகட்டத்தில் அனைத்து இயக்குனர்களுக்கும் இடையே சில whatsapp குரூப்கள் ஆரம்பிக்கப்பட்டதாம். அதில் ஒரு குரூப்பில் இருந்த கார்த்திக் சுப்புராஜ், கேம் சேஞ்சர் படத்தின் கதையை பகிர்ந்து இருக்கிறார். இதனைப் பார்த்த லிங்குசாமி சங்கரிடம் இந்த கதையை பற்றி கூறினாராம். அந்தக் கதை இயக்குனர் ஷங்கருக்கு பிடித்துப் போக அப்படியே அதை கொஞ்சம் மாற்றி அமைத்து தற்போது கேம் சேஞ்சர் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம் என்று கூறு இருக்கிறார்.
மேலும், முதலில் இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் நடிகர் விஜய்யை தான் அணுகினாராம். இந்தக் கதையை கேட்டவுடன் தளபதி விஜய்யும் மிரண்டு போய், அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராக இருந்தாராம். ஆனால், அந்த சமயத்தில் இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு ஒரு கண்டிஷனை போட்டிருந்தாராம். அதைக் கேட்டவுடன் தான் விஜய் அந்த படத்தில் இருந்து பின் வாங்கியதாக அந்தணன் கூறி இருக்கிறார்.
அதாவது இயக்குனர் ஷங்கரும் தளபதி விஜய்யும் இணைந்து ஏற்கனவே ‘நண்பன்’ படத்தில் பணிபுரிந்து இருக்கின்றார்கள். இந்தப் படம் சுமார் 100 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பயங்கர ஹிட் அடித்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதை மனதில் வைத்துக் கொண்டு தான் இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணையலாம் என்று நடிகர் விஜய் நினைத்தாராம். ஆனால், இந்தக் கதையில் நடிக்க வேண்டும் என்றால் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு கால்ஷீட் வேண்டுமென்று விஜய்யிடம் இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தாராம்.
அதனால் இயக்குனர் ஷங்கரின் கண்டிஷன் தெரிந்தவுடன், அவ்வளவு நாள் தன்னால் கால்ஷீட் தர முடியாத காரணத்தால், தளபதி விஜய் அந்தப் படத்தில்தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார். தற்போது வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கும் இந்த விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது தளபதி விஜய் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 69’ படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதுதான் தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.