இது தெரியுமா ? லியோ படத்தின் ரன்னிங் டைம் இது தான்..!

 
11

’லியோ’ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் நான்கு போஸ்டர்கள் வரிசையாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீடு மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இந்த படத்தை புரமோஷன் செய்ய, குறிப்பாக தெலுங்கு இந்தியில் அதிக அளவு புரமோஷன் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’லியோ’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படமான ’விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ’மாஸ்டர்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்களில் இருந்தது. மேற்கண்ட இரண்டு படங்களை விட ’லியோ’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web