இது தெரியுமா ? 96 படத்தில் நடிக்க வேண்டியது விஜய் சேதுபதி இல்லையாம்..! யார் அந்த நடிகர் தெரியுமா ?

2018ம் ஆண்டு வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டானது. பலருக்கும் பிடித்த படமாக உள்ளது. த்ரிஷாவின் கெரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது 96.
அந்த படத்தில் வந்த ராம், ஜானு கதாபாத்திரம் பிரபலமானது. 96 ராம் போன்று ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா என பெண்களை ஏங்க வைத்தார் பிரேம்குமார். மேலும் ஜானு த்ரிஷா அணிந்த மஞ்சள் கலர் டாப்ஸ் பிரபலமானது.
பள்ளியில் சேர்ந்து படித்தவர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்ததை படமாக்கினார் பிரேம்குமார். காஸ்டியூம் செலவு இல்லாமல் படம் எடுத்து அந்த காஸ்டியூமை பிரபலமாக்கிய பெருமையை பெற்றார் இயக்குநர். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 96 படத்தின் கதையை விஜய் சேதுபதியை மனதில் வைத்து எழுதவில்லை அவர்.நிகழச்சி ஒன்றில் பிரேம் குமார் கூறியதாவது,
இந்தியில் எடுக்கத் தான் 96 படக்கதையை எழுதினேன். அதில் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க விரும்பினேன். என்னிடம் அவரின் கான்டாக்ட் இல்லை.என் தந்தை வட இந்தியாவில் வளர்ந்தவர் என்பதால் எனக்கு இந்தி நன்றாக தெரியும். நான் சிறுவயதில் இந்தி படங்களை பார்த்தேன். எனக்கு பிடித்த பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷா. தற்போது இந்தி படத்தை எடுக்க ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருக்கிறேன் என்றார்.