இது தெரியுமா ? சிறகடிக்க ஆசை விஜயாவின் மகனும் விஜய் டிவி சீரியல் நடிகராம்..!  

 
1

350 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இதில் வெற்றி வசந்த் கதாநாயகனாக நடிக்க, கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். வெற்றி வசந்த் அம்மாவாக அணிலா ஸ்ரீகுமார் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர் சுந்தர்ராஜன், பாக்கியலட்சுமி, தமிழ்ச்செல்வி, ஸ்ரீ தீபா, ப்ரீத்தா ரெட்டி, திவாகர், சங்கீதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இப்படியான நிலையில் சமீபத்தில் நடிகை அனிலா ஸ்ரீகுமார் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் தன்னுடைய சொந்த குடும்பம் பற்றி பேசி இருக்கிறார்.

இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீக்கிரத்திலேயே முடிவடைந்த "பாரதிதாசன் காலனி" என்ற சீரியலில் நடிகை அனிலா மகன் நடித்திருக்கிறார்.

அது குறித்த ப்ரோமோவை அனிலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய மகனுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்போது அனிலா தன்னுடைய மகன் குறித்து பேட்டியில் பேசியிருக்கும் போது அவர் தன்னுடைய மகன் குறித்து வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் பாரதிதாசன் காலனி தொடங்கிய சில மாதங்களுக்குள்ளே முடிவுக்கு வந்துவிட்டது. அதே நேரத்தில் அனிலா ஸ்ரீகுமார் தானும் தன்னுடைய மகனும் ஒரே சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தால் கூட நடிப்போம் என்று கூறியிருக்கிறார். மலையாளத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார்களாம். அப்போது அந்த ஷார்ட் பிலிமில் தன்னுடைய மகன் இறந்து போய் விட்டது போன்றும் அதற்கு நான் அழுவது போன்ற காட்சிகள் இருந்தது.

அந்த காட்சிகளில் அவன் தூங்கிக் கொண்டிருந்தான் நான் அழுது நடித்து முடித்துவிட்டு அடுத்த சூட்டிங்கிற்க்கு வந்து விட்டேன். ஆனால் தூங்கி முழித்த பிறகு என்னுடைய மகன் நான் நடித்த காட்சிகளை பார்த்து எங்க அம்மாவ பார்க்க வேண்டும் என்று அழுதுவிட்டான். என் மீது அவனுக்கு அவ்வளவு பாசம் என்று அனிலா பேசிய பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார்.

From Around the web