விடாமுயற்சி படத்தை பார்த்த அஜித் என்ன சொன்னாரு தெரியுமா ?
Jan 2, 2025, 07:35 IST
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/55262861688a79e523dfc3c470c3e8e6.png)
மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, பிக்பாஸ் பிரபலமான ஆரவ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் இருந்து ஷூட்டிங் கிளிக்ஸ் வெளியாகி இருந்தது. அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் அஜித் குமார் இளமையாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி வழங்கிய பேட்டி ஒன்றில், விடாமுயற்சி படத்தை பார்த்த அஜித் இதுபோன்ற படங்களில் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல் வலுவான கதைக்களம் கொண்ட படமாகவும் விடாமுயற்சி இருக்கும் என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.