மீண்டும் தமிழில் நடிக்கும் மல்லிகா ஷெராவத்- என்ன படத்தில் நடிக்கிறார் தெரியுமா..?

 
மீண்டும் தமிழில் நடிக்கும் மல்லிகா ஷெராவத்- என்ன படத்தில் நடிக்கிறார் தெரியுமா..?

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பல வருடங்களுக்கு மீண்டும் தமிழில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம். இதில் அமெரிக்கன் வேடத்தில் நடித்த கமலுக்கு ஜோடியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். 

அதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற ‘கலாசாலா’ பாட்டுக்கு நடனமாடினார். அதை தொடர்ந்து அவர் தமிழ் பக்கம் திரும்பவே இல்லை. இந்நிலையில் வி.சி. வடிவுடையான் என்பவர் இயக்கும் ‘பாம்பாட்டம்’ என்கிற படத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் நாயகனாக ‘நான் அவன் இல்லை’ ஜீவன் நடிக்கிறார். ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் இளவரசி நாகமதி என்கிற மிகவும் டெர்ரரான கதாபாத்திரத்தில் மல்லிகா நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தில் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. சமூகவலைதளங்களில் அது பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் பின்னணியில் தயாராகும் இந்த படம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என  5 மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

From Around the web