லியோ படம் குறித்து மேடையில் கவுதம் மேனன் என்ன பேசியுள்ளார் தெரியுமா ?

 
1

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ.மேலும் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்களும் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளனர். படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் மல்லு கட்டுவது டீசர், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவற்றின்மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் கௌதம் மேனன் விஜய்க்கு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படம் சூப்பராக வந்திருப்பதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். லியோ படத்தில் தான் நடித்த காட்சிகளை தான் பார்த்துள்ளதாகவும் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்த கௌதம் மேனன் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவரிடம் தொடர்ந்து லியோ அப்டேட்டை ரசிகர்கள் கேட்ட நிலையில், விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாகவும், சூட்டிங்கின் இடையில், விஜய்யுடன் ஒரு மாலைப்பொழுதில், ஐந்தாறு பேர் மட்டும் செலவழித்ததாகவும் அதை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


முன்னதாக கௌதம் மேனன் – விஜய் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட யோகன் அதிகாரம் ஒன்று படம் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன், அந்தப் படம் குறித்து விஜய்தான் சொல்ல வேண்டும் என்றும் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விக்ரம், சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் கௌதம் மேனன் இயக்கத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கியிருந்த நிலையில், கடந்த ஆண்டில் மீண்டும் படத்தை தூசி தட்டி சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளார் கௌதம் மேனன். சமீபத்தில் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

From Around the web