ட்விட்டரில் கால்பதித்த ஜனகராஜ்- என்ன சொன்னார் தெரியுமா..? 

 
நடிகர் ஜனகராஜ்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த ஜனகராஜ் கடந்த 19-ம் தேதி முதன்முதலாக சமூகவலைதளத்தில் கணக்கு தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80-களில் தொடங்கி 90-கள் வரை நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர் ஜனகராஜ். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என பல தலைமுறை நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.

கமல்ஹாசனுடன் இவர் இணைந்து நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜின் காமடி காட்சிகள் இன்றும் டிரெண்டிங்கில் உள்ளன. வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்ட ஜனகராஜ் மகனுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.


இடையில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கவிருந்த போது, கொரோனா பிரச்னை காரணமாக சினிமா முடங்கிவிட்டது.

இந்நிலையில் கடந்த மே 19-ம் தேதி பிற்ந்தநாள் கொண்டாடிய ஜனகராஜ், அன்று ட்விட்டரில் முதன்முதலாக கணக்கு தொடங்கியுள்ளார். அதை தொடர்ந்து முதல் பதிவிட்டுள்ள அவர், ”எனது பிறந்தநாளில் எனது ட்விட்டர் பயணத்தை இன்று தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!” என்று தெரிவித்துள்ளர்.

From Around the web