நல்ல செய்தி கொண்ட லோகேஷ் கனகராஜ் அடுத்து என்ன செய்தார் தெரியுமா..?

 
நல்ல செய்தி கொண்ட லோகேஷ் கனகராஜ் அடுத்து என்ன செய்தார் தெரியுமா..?

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாக தகவல் வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிஸ்சார்ஜானவுடன் அடுத்த காரியமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளார். 

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியானது.

தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்ட லோகேஷ் கனகராஜ், நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார். அதுதொடர்பாக புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


இதுகுறித்து அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன். தற்போது கொரோனா நெகட்டிவ் என்கிற முடிவு தெரிந்துள்ளது. அனைவரும் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் சிகிச்சை முடிந்தவுடன் அவர் ஜனநாயக கடமையை தவறாமல் செய்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுளது. 
 

From Around the web