பயில்வான் ரங்கநாதனின் சாவு எப்படி இருக்கணும் தெரியுமா..? ஆத்திரத்தை கொட்டித் தீர்த்த சுசித்ரா!

 
1
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, சுச்சி லீக்ஸ் விவகாரத்தின் போது இணையத்தில் பலர் பரபரப்பாக பேசினார்கள். ஆனால், அதன் பிறகு அனைவரும் அதுபற்றி பேசுவது இல்லை. ஆனால், இந்த பயில்வான் ரங்கநாதன் மட்டும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுச்சி லீக்ஸ் சுசித்ரானு பேசிக்கிட்டு இருக்காரு, அப்போ தனுஷ் மற்றும் கார்த்திக் காசு கொடுத்து என்னைபற்றி பேச சொல்லுறாங்களா? தனுஷை பற்றி தப்பா பேசுங்க என்று ரஜினி காசு கொடுத்தா, தனுஷ் பற்றியும் தப்பா பேசுவார். அந்த வேலையைத்தான் பயில்வான் ரங்கநாதன் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.

அப்படித்தான் நான் ஓட்டல் ரூமில் இருந்தேன் என்று சொன்னார் எல்லாமே தனுஷ்,கார்த்திக் செய்த வேலைதான். நான் சினிமாவில் இருபது வருஷமா பாடகியாக இருந்து இருக்கிறேன் இதுவரை நான் ஒரு முறைக்கூட பயில்வானை சந்தித்தது இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. அவர் ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த விஷயம் தனக்கு நன்றாகத் தெரியும். அந்த காலகட்டத்தில் கேரளாவில் மட்டுமே இருந்த பிட்டுப் பட கலாச்சாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்து பாலம் போட்டுக்கொடுத்ததே பயில்வான் தான்.

இந்த நேரத்தில் தான் ராதாரவி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்டோர் அனைவரும் சேர்ந்து பிட்டு பட ஷூட்டிங் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடக்கக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாட்டுகளை விதித்து அந்த பிட்டு பட கலாச்சாரத்தை ஒழித்தார்கள். அப்போது வேலை இன்றி தவித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதன் பிறகு தனக்கு தெரிந்த தொடர்புகளை பயன்படுத்தி சினிமாவில் சிறு சிறு கதா பாத்திரங்களில் நடிப்பது, பத்திரிகைகளில் செய்திகளில் கிசு கிசு எழுதத் தொடங்கினார். அவர் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை அவர் ஒரு பிட்டு படத்திற்கு ஆட்களை பிடித்துக்கொடுத்த மாமா பையன்.

பயில்வான் ரங்கநாதனின் சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, அவமானப்பட்டு, நடுரோட்டில் அனைவர் முன்னாடியும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுது தினம் தினம் சாகணும். நாசமா போ, செத்துப்போ, அப்போத்தான் உன் மகள் உருப்படுவாள் இது தான் நான் பயில்வான் ரங்கநாதனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய அறிவுரை, இல்லை என்றால் யாராவது உன் மண்டையை உடைத்துவிடுவார்கள் உனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும், அப்புறம் அசிங்கப்பட்டு செத்துப்போவ என்று பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் பயில்வானை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

From Around the web