’லொள்ளு சபா’வுக்கு முன்பே ராதிகாவுடன் சீரியலில் நடித்துள்ள சந்தானம்- என்ன சீரியல் தெரியுமா..?

 
சந்தானம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று சாதனை படைத்த நடிகர் சந்தானம்,  ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, நடிகை ராதிகாவின் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் சந்தானம். அதை தொடர்ந்து சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் நகைச்சுவை நடிகரான சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

கடினமாக உழைத்தால் முன்னேறிவிடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சந்தானம், விஜய் டிவி ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். அதுவும் நடிகை ராதிகாவின் தயாரிப்பில் அவர் நடித்துள்ளார்.

சித்தி சீரியலை தொடர்ந்து நடிகை ராதிகா நடித்த ‘அண்ணாமலை’ சீரியல் ஒளிப்பரப்பானது. அதில் சந்தானம் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கிளிப்பாங்க வெளியாகி வைரலாகி வருகிறது. 

From Around the web