திடீரென சமையலில் குதித்த சிம்பு- என்ன சமைத்தார் தெரியுமா..?

 
நடிகர் சிம்பு

அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகர் சிம்பு, குடும்பத்தினருக்காக சுவை மிகுந்த உணவை சமைத்து, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் மிகவும் வித்தியாசமான முயற்சியில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் மீது தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புள்ள நிலையில், விரைவில் ‘மாநாடு’ படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

அதை தொடர்ந்து நடிகர் சிம்புவிடம் பல்வேறு படங்கள் கைவசம் உள்ளது. அதன்படி கவுதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானிசங்கருடன் அவர் நடிக்கும் ‘பத்து தல’, கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ மற்றும் ஹன்சிகாவுடன் அவர் நடித்து முடித்துள்ள ‘மஹா’ ஆகிய படங்கள் முக்கிய படங்களாக உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்படங்களின் ரிலீஸ் குறித்த விபரங்கள் தெரிய வரும். மேலும் பல்வேறு படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீட்டில் இருக்கும் குடும்பத்தினருக்காக தன் கையால் மஸ்ரூம் பன்னீர் கிரேவி சமைத்து சிம்பு பரிமாறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From Around the web