விரைவில் வெளியாகும் நெற்றிக்கண் சிங்கிள் டிராக்- என்ன பாடல் தெரியுமா..?
 

 
நயன்தாரா

நடிகை நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இதுவும் கடந்த போகும்’ என்கிற பாடலில் சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரவுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான படம் ‘பிளைண்டு’. இதனுடைய அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘நெற்றிக்கண்’. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் சொந்தமாக தயாரித்துள்ளார்.

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அதை தொடர்ந்து இதனுடைய சிங்கிள் டிராக் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.


“இதுவும் கடந்து போகும்”  என்கிற இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலின் உருவாக்கம் தொடர்பான சில காட்சிகள் அடங்கிய வீடியோ ட்விட்டரில் ஸ்ரீதேவி ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். முன்னதாக இவர் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கிர்ஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட படங்களில் மட்டுமே அதிகளிவில் நடித்து வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகியை மையப்படுத்திய கதையில் அவர் நடித்துள்ளதால், நெற்றிக்கண் படத்திற்கு நயன்தாரா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

From Around the web