லியோ பட ட்ரைலரை பார்த்த பிரபலம் என்ன சொன்னார் தெரியுமா ?

 
1

வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘லியோ’.இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை காண கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் ’ஜில் ஜங் ஜக்’ என்ற திரைப்படத்தின் இயக்குனரும் ‘லியோ’ படத்தின் வசனகர்த்தாவுமான தீரஜ் வைத்தி, சமீபத்தில் ‘லியோ’ படத்தின் டிரைலரை பார்த்ததாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் டிரைலரை பார்த்து விட்டு அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் சந்தித்ததாகவும் இந்த ட்ரெய்லரை பார்த்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரையில் தான் இருக்கும் என்றும் பதிவு செய்துள்ளார்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.


 

From Around the web