குபேரா படத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தர் என்ன சொன்னார் தெரியுமா ?

 
1

தனுஷின் நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் நேரடி தெலுங்கு படமாகும். சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமான தனுஷிற்கு அவரின் முதல் தெலுங்கு படமே வெற்றிப்படமாக அமைந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தில் அவருடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். முதலில் இப்படத்திற்கு அந்தளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது ஒரு நேரடி தெலுங்கு படம் என்பதால் ரசிகர்கள் அந்தளவிற்கு இப்படத்தை எதிர்பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை.


ஆனால் சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாக உள்ளது. என்னதான் இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக ஒரு வதந்தி பரவியது.

இந்த வதந்தி தனுஷ் ரசிகர்களை அப்சட்டாகியது. ஏற்கனவே தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனைத்தொடர்ந்து குபேரா படத்தின் ரிலீஸும் தள்ளிப்போவதாக வந்த தகவல் அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான், குபேரா திரைப்படம் சொன்னபடி வெளியாகும் என படக்குழு ஒரு டீசரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் குபேரா படத்தின் ரிலீஸிற்கான வேலைகளில் தற்போது படக்குழு பிசியாக இறங்கியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பிரபல விநியோகஸ்தர் ராகுல் பார்த்துள்ளாராம். படத்தை பார்த்த அவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் குபேரா படத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டவாறு, சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான குபேரா படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.


நடிகர்களின் நடிப்பு முதல் கதை மற்றும் திரைக்கதை வரை அனைத்துமே சிறப்பாக இருந்தது. தனுஷிற்கு அடுத்த பிளாக்பஸ்டர் லோடிங் என்றே சொல்லலாம். நாகர்ஜுனா மற்றும் ரஷ்மிகாவின் நடிப்பும் அபாரமாக இருந்தது. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார் ராகுல். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான விநியோகஸ்தர்களின் ஒருவர் தான் ராகுல். GOAT உட்பட பல படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகின்றார் ராகுல்.


எனவே அவரே குபேரா படம் சிறப்பாக இருப்பதாக கூறியிருப்பதால் கண்டிப்பாக இப்படம் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே தனுஷ் நடித்து இயக்கியிருந்த இட்லி கடை திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இட்லி கடை வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தினால் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து தற்போது இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிப்ரவரி மாதம் வெளியானது.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தனுஷ் தற்போது ஒரு கம் பேக்கிற்காக காத்துகொண்டு இருக்கின்றார். அவருக்கு குபேரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

From Around the web