தமிழில் களமிறங்கும் சோனி லைவ்- முதலில் வெளியாகும் படம் என்ன தெரியுமா..?

 
சோனி லைவ்

இந்தியில் பிரபலமாக இருக்கும் சோனி லைவ் ஓடிடி தளம் விரைவில் தமிழில் கால்பதிக்கவுள்ளது. அதற்காக பல்வேறு புதிய படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா முதல் அலை கடந்த வருடம் பரவிய போது மக்கள் பலர் ஓடிடி தளங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கினார். இதனால் ஏனைய ஓடிடி தளங்களில் இந்தியாவில் மிகப்பெரிய வளர்சியை கண்டன. இதன்மூலம் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டில் தமிழில் மட்டும் 20 புதிய படங்கள் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தளத்திற்கு உருவாகி வரும் சந்தை மதிப்பை உணர்ந்துகொண்டுள்ள நிறுவனங்கள் பல, தொடர்ந்து பல்வேறு புதிய ஓடிடி தளங்களை களமிறக்கி வருகின்றனர்.

சோனி நெட்வொர்க் நிறுவனத்தின் சொந்த ஓடிடி தளமான சோனி லைவ் ஏற்கனவே இந்தியில் பிரபலமாகவுள்ளது. இந்நிலையில் இந்த தளம் தற்போது தமிழிலும் கால்பதிக்கிறது. அதற்கான தலைமைப் பதிவியில் பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் இணைந்துள்ளார்.

தமிழித் திரையுலகில் அவருக்கு இருக்கும் தொடர்புகளை வைத்து ரிலீஸாகாமல் இருக்கும் பல்வேறு புதிய படங்களின் வெளியீட்டை சோனி லைவ்வுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அதற்கான நடவடிக்கைகள் தற்போது துவங்கியுள்ளன.

ஏற்கனவே இந்நிறுவனம் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ், நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள ராக்கி போன்ற படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web