நானியின் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?
நானி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஹாய் நானா படம். இந்த படமும் அமோக வரவேற்பு பெற்றது. இதில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். நானிக்கு கடந்த ஆண்டு வெற்றி படங்களாகவே அமைந்திருந்தன.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நானி நடிப்பில் சரி போதா சனிவாரம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது தமிழில் சூர்யா சாட்டர்டே என்ற பெயரில் வெளியிடப்பட்டது. சனிக்கிழமை மட்டும் சண்டை போடும் ஒரு வினோதமான கேரக்டரில் நானி இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் எஸ். ஜே சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் நானி நடித்த சரி போதா சனிவாரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னட, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.