விரைவில் ஆரம்பமாகும் சிம்புவின் ’பத்து தல’- எப்போது தெரியுமா..?

 
பத்து தல திரைப்படம்

சிம்பு, கவுதம் கார்த்தி, ப்ரியா பவானிசங்கர், டி.ஜே. அருணாச்சலம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘பத்து தல’ படத்துக்கான முதற்கட்ட ஷூட்டிங் விரைவில் துவங்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. அவருடைய நடிப்பில் ‘மாநாடு’ படம் முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் திருத்தணியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள படம் ‘பத்து தல’. கிருஷ்ணா இயக்கும் இந்த படம் கன்னடத்தில் வெளியான ’மஃப்டி’ படத்தின் ரீமேக்காகும்.

இந்த படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றன. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த படத்துக்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From Around the web