சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. இவர்களுடன் இணைந்து சரிதா, மிஷ்கின், மோனிஷா, சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். கடந்த ஜூலை 14ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்ஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இப்படியான நிலையில் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
watch Sathya, a timid cartoonist transform into a fearless hero and take over the world! ⚡️#MaaveeranOnPrime, Aug 11 pic.twitter.com/wgUHTaacLQ
— prime video IN (@PrimeVideoIN) August 7, 2023