‘விடுதலை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா ?

 
1

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விடுதலை. படத்தில் சூரி  கதாநாயகனாக, அந்தக் காவலர் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். விஜய் சேதுபதி வாத்தியாராக மிரட்டுகிறார். பவானி ஸ்ரீ, இயக்குனர் ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களின் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

‘விடுதலை’ படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் விடுதலை படத்தின் ஓடிடி படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது அந்த அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் Zee5 ஓடிடி தளத்தில் விடுதலை வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

1

From Around the web