NEEK திரைப்படத்தின் OTT ரிலீஸ் எப்போ தெரியுமா ?

பா.பாண்டி மற்றும் ராயன் என தனுஷ் இயக்கிய இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து அவர் இயக்கும் மூன்றாவது திரைப்படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
என்னதான் தனுஷ் இப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் NEEK எனப்படும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும், தனுஷிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்தோம் என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
எனவே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே தான் பெற்றது. இந்நிலையில் திரையில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத இப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. இம்மாதம் இறுதியில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அநேகமாக மார்ச் 21 ஆம் தேதியோ அல்லது மார்ச் 28 ஆம் தேதியோ இப்படம் OTT யில் வெளியாகும் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.