எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் எப்போ தெரியுமா ?

 
1

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன்.இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை சர்வதேச அளவில் பெற்று வரும் நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை ஒடிடியில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட வெளியிட போவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது 

எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி வீடியோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப். 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web