‘பொன்னியின் செல்வன் 2‘ பாடல் எப்போ வெளியீடு தெரியுமா ?

 
1

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இதனின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பை பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீடு ஏப்ரல் 5-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web