வேட்டையன் படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா..?
Apr 8, 2024, 09:05 IST
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.
ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட் குறித்த சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது .
அதன்படி தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.