இந்தியாவில் இல்லாத நடிகர் தனுஷ் கர்ணன் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா..?

 
இந்தியாவில் இல்லாத நடிகர் தனுஷ் கர்ணன் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா..?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கர்ணன்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாக நடிகர் தனுஷ் தயாரிப்பாளர் தாணுவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகியுள்ள படம் கர்ணன். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ரஜீஷா விஜயன், லால், கவுரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்துள்ள பல்வேறு தரப்பினர் கர்ணன் படக்குழுவினருக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல திரையுலக பிரபலங்களும் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் தங்கியுள்ளார். இதனால் தான் அவர் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க முடியாமல் போனது. கர்ணன் பட ப்ரோமோஷன் பணிகளில் பங்கேற்க முடியாமல் ஆனது.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள திரையரங்கில் மனைவி ஐஸ்வர்யா மற்றும் தன்னுடைய இரண்டு மகன்களுடன் கர்ணன் படம் பார்த்துள்ளார் தனுஷ். அப்போது அந்த அரங்கம் முழுக்க நிறைந்திருந்ததாகவும், அமெரிக்காவில் கர்ணன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ள தாணு, தனுஷ் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாக கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தி கிரே மேன் படப்பிடிப்பு முடிய குறைந்தது ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. எனினும், நடிகர் தனுஷ் இன்னும் 40 நாட்களில் சென்னை திரும்புவார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. 
 

From Around the web