பாலைவனத்தில் பைக் டூரிங் செய்யும் அஜித்- அடுத்த எங்கு செல்கிறார் தெரியுமா?

 
அஜித்
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சுற்றுலா சென்று வரும் நடிகர் அஜித் தார் பாலைவனத்துக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வலிமை படத்துக்கான பட்பபிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இதையடுத்து நடிகர் அஜித் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பைக் டூர் செய்து வருகிறார்.

டெல்லிக்கு தனியாக பைக்கில் சென்ற அவர், தாஜ்மஹாலை சுற்றி பார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் உரையாடினார்.

தற்போது அவர் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. அங்குள்ள தார் பாலைவனத்தில் பைக்கின் நிழலில் அஜித் அமர்ந்துள்ள புகைப்படங்கள், லுனி ஆற்றின் பாறை முனையில் அவர் நிற்கும் புகைப்படம் உள்ளிட்டவை வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் இல்லை. ஆனால் தற்போது அவருடைய பைக் டூரிங் படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்து வருகின்றனர். அதனால் அடுத்ததாக அவர் எந்த ஊருக்கு செல்லவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
 

From Around the web