மீண்டும் தனுஷுடன் நடிக்கும் கென் கருணாஸ்- எந்த படம் தெரியுமா..?

 
கென் கருணாஸ், தனுஷ் மற்றும் கருணாஸ்

அசுரன் படத்துக்கு பிறகு தனுஷ் உடன் மீண்டும் கென் கருணாஸ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘அசுரன்’. இந்த படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியார் தமிழுக்கு அறிமுகமானார். அவருடன் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் மற்றும் பாடகர் டீ.ஜே. அருணாச்சலம் ஆகியோரும் சினிமாவில் கால்பதித்தனர்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் மீண்டும் கென் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் தான் தனுஷுடன் மீண்டும் கென் கருணாஸ் நடிகக்வுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ், கென் உடன் தனுஷ் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

From Around the web