லியோ படத்தின் ட்ரைலர் எதுல ரிலீஸ் ஆகுது தெரியுமா?

 
1

தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம்  லியோ..  

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் கொடுத்து மகிழ்விப்போம் என படக்குழு தெரிவித்தது. அதன்படி செகண்ட் சிங்கிள் வெளியானது. அதனையடுத்து நாளை அக்டோபர் 5ஆம் தேதி லியோ ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் லியோ ட்ரெய்லர் எதில் ரிலீஸாகும் என்பது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ட்ரெய்லரானது சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் டிவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது.

முன்னதாக ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினியா இல்லை விஜய்யா என்ற பஞ்சாயத்து பீக்கில் இருந்தது. அப்போது மேடையில் கலாநிதி மாறன் பேசியது விஜய்க்கு எதிரானது என்று ஒருதரப்பினர் கிளப்பிவிட்டனர். அதுமட்டுமின்றி ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் விஜய்யை பற்றி அட்லீ உள்ளிட்டோர் புகழ்ந்து பேசினர்.

அந்த ஆடியோ வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால் ஒளிபரப்பானதில் விஜய் பற்றிய பேச்சுக்கள் எடிட் செய்யப்பட்டிருந்தன. எனவே விஜய்க்கு எதிராக சன் குழுமம் களமிறங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் சன் டிவியில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவிருப்பதை அடுத்து விஜய்க்கும் சன் டிவிக்கும் எந்த பஞ்சாயத்தும் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக திரைத்துறையினரும், விஜய் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.


 

From Around the web