ராமர், ராவணன் மற்றும் சீதை கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் தெரியுமா ?

 
1

 தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகவுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ராமர், ராவணன் மற்றும் சீதை கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் சீதை மற்றும் ராவணன் கேரக்டர்களில் தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

அதாவது சீதை கேரக்டரில் சாய் பல்லவி, ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அனிமல்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்த ரன்பீர் கபூர், ராமர் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நிதிஷ் திவாரி என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் 2025 ஆம் ஆண்டு இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. உலக தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


 

From Around the web