மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம் திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா..?

 
1

மறைந்த இயக்குநர் ராசுமதுரவன் இயக்கியிருந்த மாயண்டி குடும்பத்தார் படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து பேமிலி செண்டிமென்ட் பாணியில் அமைந்திருக்கும். இந்த படத்தில் மறைந்த இயக்குநர் நடிகர் மணிவண்ணன், ஜிஎம் குமார், பொன் வண்ணன், சீமான், சிங்கம் புலி, கே.பி. ஜெகன், ரவிமரியா, ராஜ்கபூர், நந்தா பெரியசாமி, தருண் கோபி உள்பட 10 இயக்குநர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகமாக மாயண்டி குடும்பத்தார் 2 படம் உருவாகவுள்ளது. படத்தை கே.பி. ஜெகன் இயக்குகிறார். இதுதொடர்பாக முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளரான சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

மாயாண்டி குடும்பத்தார் முதல் பாகத்தை தயாரித்த யுனைடைட் ஆர்ட்ஸ் நிறுவனமே படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக அமைந்திருந்த மணிவண்ணனுக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

மணிவண்ணன் கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் ராஜ்கிரணை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. விரைவில் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


 

From Around the web