இந்த படத்தில் இருப்பவர் யாருன்னு தெரிகிறதா ? இந்த டைரக்டர் இரண்டே படத்தில் 1000 கோடி வசூல் செய்தவர்..!

இதுவரை தோல்வியே சந்திக்காத இந்த இயக்குனர், கடைசியாக இயக்கிய 2 படங்கள் மூலம் 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறார். அவரின் குழந்தைப்பருவ புகைப்படம் தான் இது.
அந்த பிளெடி ஸ்வீட் பாய் வேறுயாருமில்லை... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். சினிமா மீதுள்ள மோகத்தால் வங்கி வேலையை தூக்கியெறிந்துவிட்டு வந்து அவர் இயக்கிய மாநகரம் திரைப்படம் அவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பு அளித்தது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.
கைதி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டர் படமாக உள்ளது. தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ள எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸுக்கு பிள்ளையார் சுழி போட்டது கைதி படம் தான். இதையடுத்து தளாபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தான் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்பதை நிரூபித்தார். அப்படத்திற்கு பின்னர் தன்னுடைய கனவு நாயகனான கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைத்தார் லோகேஷ்.
5 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த கமலுக்கு பக்கா கம்பேக் படமாக விக்ரம் அமைந்தது. அந்த படத்தை ஒரு ஃபேன் பாய் ஆக செதுக்கி இருந்தார் லோகேஷ். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்தது. இதையடுத்து நடிகர் விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து லியோ என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பை நான்கு மாதங்களில் முடித்து படத்தை கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லியோ படம் முதல் நாளே ரூ.140 கோடிக்கு மேல் வசூலித்தது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படம் லியோ தான். இப்படம் ஒட்டுமொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இப்படி கடைசியாக அவர் இயக்கிய லியோ மற்றும் விக்ரம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை சேர்த்தால் 1000 கோடிக்கு மேல் சென்றுவிடும்.
2 படங்களில் 1000 கோடி வசூல் அள்ளியவர் அடுத்ததாக ஒரே படத்தில் 1000 கோடி வசூலை அள்ள தயாராகிவிட்டார். அதன்படி தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படம் இந்த ஆண்டு ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி கோலிவுட்டின் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வரும் லோகேஷ், இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.