விரைவில் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்- ஹீரோ யார் தெரியும்மா..?

 
ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். கொரோனா காரணமாக இதனுடைய படப்பிடிப்பில் தோய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் விரைவில் சலார் படத்திற்கான மீதமுள்ள பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் மகேஷ் பாபு அல்லது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் மாபெரும் ஆக்‌ஷன் படமாக இது தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூரை அணுக படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் ஜான்வி கபூரின் வரவை தென்னிந்திய திரையுலகம் தான் அதிகம் எதிர்பார்க்கிறது. அதிலும் தெலுங்கு திரையுலகம் அவருக்காக காத்துக்கொண்டுள்ளது.

ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அது இதுவரை படக்குழு தரப்பில் இருந்து உறுதிசெய்யப்படவில்லை. அதனால் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்துக்கு ஜான்வி கபூர் சம்மதம் தெரிவிப்பார் என்றே கூறப்படுகிறது. 

From Around the web