வெங்கட் பிரபு இயக்கத்தில் அடலட் ரோமேன்ஸ் படம்- ஹீரோ யார் தெரியுமா..?

 
வெங்கட் பிரபு

மாநாடு படத்துக்கு முன்னதாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் குறித்தும், அதில் நடித்துள்ள நடிகர்கள் பற்றிய விபரங்கள் பற்றியும் தற்போது தெரியவந்துள்ளன.

சிம்பு இயக்கத்தில் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அடலட் ரோமேன்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள அந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்போர்ட் நிறுவனமும், வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பனியும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் பாணியில் இப்படம் தயாராகியுள்ளது.

வரும் செப்டம்பரில் இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web