தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன்- யார் ஹீரோ தெரியுமா?

 
தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன்- யார் ஹீரோ தெரியுமா?

தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த கர்ணன் திரைப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிக் ஆர்டஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் லால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கர்ணன். கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.

அப்போதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. உத்தரவு வெளியான ஒரு சில நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. எனினும், வெறும் 10 நாட்கள் வசூல் மூலம் மிகப்பெரிய வருவாயை கர்ணன் படம் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான பெல்லம்கொண்டா சுரேஷ் அவருடைய மகன் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிப்பில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதுவரை கமர்ஷியல் படங்களில் அதிகமாக நடித்து வரும் தனது மகன், கர்ணன் போன்ற கதைக்கு அம்சம் கொண்ட படங்களில் நடித்தால் தெலுங்கு சினிமாவில் உச்சத்தை தொடலாம் என பெல்லம்கொண்டா சுரேஷ் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் மிகப்பெரிய விலை கொடுத்து இந்த படத்தை அவர் வாங்கியுள்ளார். விரைவில் இது தொடர்பான அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படம், தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web