தலைவர் 170 படத்தின் வில்லன் யார் தெரியுமா?

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை ஆன்மீக பயணம் முடிந்து சென்னை திரும்பியுள்ள நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இந்த வருடத்திற்குள் முடிவடைய உள்ளன.

இப்படியான நிலையில் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி இவர்களது கூட்டணி இந்த படத்தில் அமைந்தால் நிச்சயம் அது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rajinikanth-170-movie-villian update

From Around the web