தேவர் மகன் படத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா ?

 
1

உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நீலிமா ராணி.அதன் பின்னர் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின் இவர் டும் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க படத்தின் மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில் தன்னுடைய தந்தை குறித்து நீலிமா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் நடித்துக் கொண்டிருப்பது மாதம் ஒரு லட்சம் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அந்த பணத்தை எல்லாமே என்னுடைய அப்பா சூதாட்டத்தில் விட்டுட்டார். இது எனக்கு கஷ்டமாக சூதாட்டத்தில் எப்படி சமாளிக்க போறேன்னு இருந்தது. ஆனால், ஒன்று தான் நான் சொல்ல விரும்புகிறேன். தோல்விகள் தான் வெற்றியின் படிகள். ஏன்னா, அந்த இடத்தில் நான் தளர்ந்து சோர்ந்து போய் அய்யய்யோ அப்பா இப்படி பண்ணிட்டாங்களே என்று நினைத்திருந்தால் எப்படி வாழ போறோம், எப்படி என் தம்பியை படிக்க போறோம் என்று நினைத்திருந்தால் நான் இந்தளவிற்கு வந்திருக்க முடியாது.

நான் அந்த இடத்தில் தைரியத்தை விடவில்லை. இந்த தைரியத்தை என்னுடைய அப்பா தான் எனக்கு சொல்லித் தந்தார். தன்னம்பிக்கை தைரியத்தோடு வாழ வேண்டும் என்று எனக்கு தைரியத்தோடு கொடுத்தார். பின் ஒரு வாடகை வீட்டுக்கு போய் ஒரு அந்த வாடகை வீட்டை வாங்கும் அளவிற்கு எனக்கு நம்பிக்கை வந்தது. அந்த தைரியத்திற்கு காரணம் அந்த தோல்விகள்தான். வெற்றி தோல்விகள் எல்லாமே நம்மளுடைய வாழ்க்கையில் இருக்கும்.

 

From Around the web