பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ராஜி யார் தெரியுமா?

 
1
பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் வெற்றிக்கரமாக முடிவடைய, மக்களின் ஆசைப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடங்கப்பட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் சீசன் 2வில் மிஸ்ஸாகி விட்டனர்.

மூர்த்தியாக நடித்த ஸ்டாலின், மீனாவாக நடித்த ஹேமா ராஜ்குமார் மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் நடித்து வருகின்றனர். இந்த பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதே உண்மை. அதே சமயம் சீரியலில் நிரோஷாவின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக ராஜி ரோலில் நடிக்கும் ஷாலினி. இவரை இப்போது ரசிகர்களின் சின்னத்திரை பிரியங்கா மோகன் என செல்ல பெயர் வைத்து அழைக்கின்றனர்.

அதற்கு காரணம், அவரின் முக சாயல் பிரியங்கா மோகனுடன் லேசாக ஒத்து போவது. அதுமட்டுமில்லை அவரின் பேச்சும், நடிப்பும் பிரியங்கா மோகனை நிபாகப்படுத்தும்.

ஷாலினி ஒரு நல்ல டான்சரும் கூட. முதன் முதலாக தனது கணவருடன் சேர்து யூடியூப்பில் கப்புல்ஸ் டான்ஸ் வீடியோவை வெளியிட்டார் ஷாலினி. அதற்கு நல்ல ரீச் கிடைத்தது. தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டார். அப்போது தான் விஜய் டிவியில் கதாநாயகி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் ஷாலினி போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். அவருக்கு ரன்னர் அப் பட்டம் கொடுக்கப்பட்டது. ராதிகா மற்றும் கேஸ். எஸ் ரவிக்குமார் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்தனர். ரன்னர் அப் பட்டத்துடன் ஷாலினியின் நடிப்புக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வாய்ப்பும் தேடி வந்தது.அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியாக நடித்து வருகிறார். 

From Around the web