விஜய் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர், நடிகை யார் தெரியுமா?

2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கலந்த காதல் கதையாக வெளியான திரைப்படம் ''கில்லி'' .
காதல் நாயகனாக வலம் வந்த விஜயை ஆக்ஷன் நாயகனாக களமிறக்கிய திரைப்படம் கில்லி, விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி சண்டை காட்சிகள், குத்தாட்டம் போட வைக்கும் பாடல்கள், மனதை வருடம் காதல் என படம் ரசிகர்கள் மத்தியில் புள் ஸ்கோர் செய்தது.
விஜயின் அதிரடி, த்ரிஷாவின் இன்னொசென்ஸ், வில்லனாக பட்டையை கிளப்பிய பிரகாஷ் ராஜின் வில்லத்தனம் என படம் முழுக்க ரசிகர்களை அதே துடிப்போடு வைத்திருந்தது படம்.வித்யாசாகரின் துள்ளலான இசையில் உருவான படத்தின் அத்தனை பாடல்களுமே மக்களை ஆடவைத்த பாடல்கள், அப்படி போடு போடு பாடலுக்கு இன்றும் ஆடாமல் இருக்கமுடியாது.
மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான் தரணி இயக்கத்தில் தமிழில் வெளியான கில்லி திரைப்படம். சொல்லப்போனால் ஒரிஜினல் வெர்ஷன் ஒக்கடு படத்தை விட கில்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் டபுள் மடங்கு வசூலை ஈட்டி பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் விஜய் த்ரிஷாவுக்கு முன் கில்லி படத்தில் நடிக்கவிருந்த நடிகர் நடிகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் அப்படத்தில் விஜய் திரிஷா நடிப்பதாகவே இல்லையாம். கில்லி படத்தின் கதையை தரணி முதன் முதலில் விக்ரமிடம் தான் சொன்னாராம்.
தில், தூள் போன்ற வெற்றிப்படங்களை விக்ரமுக்கு கொடுத்த தரணி கில்லி படத்திலும் அவரையே ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணினாராம். அதே போல் ஹீரோயினாக நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர் தரணி. ஆனால் விக்ரம், ஜோதிகா இருவருமே வேறு படத்தில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.உடனே தரணி அந்த கதையை விஜயிடம் கூர அவர் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பின் விஜய் நடிக்க கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.