நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி யாருடைய மகள் தெரியுமா...?

 
முதல் மனைவியுடன் விஷ்ணு விஷால்

சமீபத்தில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி குறித்த பின்னணி விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனான விஷ்ணு விஷாலுக்கும் சென்னையைச் சேர்ந்த ரஜினி நட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ரஜினியை விவகாரத்து செய்தார் விஷ்ணு விஷால். அதை தொடர்ந்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில விஷ்ணு விஷாலின் முதல் மனைவி குறித்த விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மேலாளராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் கே. நட்ராஜ். ரஜினிகாந்தின் மீதுள்ள அபிமானத்தால் தன்னுடைய மகளுக்கு ரஜினி என்று அவர் பெயர் சூட்டினார்.

கே. நட்ராஜ் பல படங்கள் நடித்துள்ளார். பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா உள்ளிட்ட பிரபலமான சீரியல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From Around the web