வயிற்றில் குழந்தை வச்சுக்கிட்டு இந்த ஆட்டம் தேவையா? கிளப்பில் நடனமாடும் அமலாபால்..!

 
1

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் என்பவருடன் அமலாபால் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில்  இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் தான்  கர்ப்பமாக இருப்பதாக இருப்பதாக அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்தார் என்பதும் குறிப்பாக கணவருடன்  ரொமான்ஸில்  ஈடுபட்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்த நிலையில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் செம்ம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். 7 மாத கர்ப்பிணிக்கு இந்த ஆட்டம் தேவையா என்று சிலர் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை நிச்சயம் மகிழ்ச்சியாக  இருக்கும் என்று சிலர் பாசிட்டிவாகவும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

அமலாபால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்றே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுப்பார் என்றும் அதனால் இந்த டான்ஸ் அவருக்கு பெரிய அளவில்  எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் சிலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web