நடிகை ரைஸா பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் புகார்..!

 
நடிகை ரைஸா பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் புகார்..!

தவறான ஃபேஷியல் அளிக்கப்பட்டு முகம் வீங்கிய விவகாரத்தில் நடிகை ரைஸா பணம் கேட்டு மிரட்டுவதாக தோல் மருத்துவர் பைரவி செந்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

நடிகை ரைஸா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீங்கிய முகத்துடன் தன்னுடைய புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அதில், பைரவி என்கிற தோல் மருத்துவர் வலுகட்டாயமாக தேவையற்ற ஃபேஷியலை அளித்ததால் தனது முகம் வீங்கிவிட்டதாக புகார் பதிவிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பவே, சம்மந்தப்பட்ட மருத்துவர் பைரவி செந்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், குறிப்பிட்ட சிகிச்சை அளித்துள்ளதன் காரணமாக ஒருவாரம் முகம் வீக்கமாக தான் இருக்கும். இதுகுறித்து ரைஸாவுக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பெரிய பிரச்னையாக செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரைஸாவுக்கு அளிக்கப்பட்ட ஃபேஷியல் விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் பைரவி அளித்துள்ள விளக்கத்திற்கு விரைவில் நடிகை ரைஸா பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web