டாக்டர் பட ரிலீஸ் தேதி இதுதான்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
 
                                    
                                நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார், முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தை இயக்கி முடித்தார். கொரோனா கட்டுப்பாடுகள், தமிழக சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தாமதமாகி வந்தது.
See you in theatres #DoctorFromOct9 😊👍#Doctor pic.twitter.com/FO3tXWvEvy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, 2021
 இந்நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது அதை உறுதி செய்து, ரிலீஸ் தேதிக்காக அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.
அதன்படி டாக்டர் படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றனர். டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 - cini express.jpg)