டாக்டர் படம் அந்த 'வெப் தொடரின்’ காப்பியா..? டிரெய்லர் சொல்லும் ரகசியம்..!
 

 
டாக்டர் படம்

டாக்டர் படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது உலகளவில் வரவேற்பு பெற்ற ஸ்பானிய மொழி சிரீஸின் காப்பியாக இருக்கக்கூடுமோ என்கிற ஐயத்தை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் எழுப்பியுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இவர்களோடு யோகி பாபு, தீபா, காமெடி டைம் அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பார்க்கும் போது ‘மனி ஹையிஸ்ட்’ என்கிற ஸ்பானிய மொழி சீரிஸை ஞாபகப்படுத்தும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த சிரீஸில் ‘புரொஃபஸர்’ என்று கூறப்படும் நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் கொள்ளையடிப்பதே கதை. அதேபோன்ற டாக்டர் படத்தில் ‘டாக்டர்’ என்கிற நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.இதன்காரணமாக டாக்டர் படம் மனி ஹையிஸ்ட் தொடரின் காப்பியா என்கிற சந்தேகத்தை சமூகவலைதளங்களில் பலரிடம் பதிவிட்டு வருகின்றனர். எனினும், டாக்டர் பட டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் அக்டோபர் 9-ம் தேதி இப்படம் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web