4 மொழிகளில் ஓ.டி.டி-யில் வெளியான ‘டாக்டர்’..!

 
டாக்டர் படம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலு ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் டாக்டர் படம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. முன்னதாகவே டிவியில் ஒளிப்பரப்பான பிறகு ஓ.டி.டி தளத்தில் இப்படம் ரீலிஸாகும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்படி டாக்டர் படம் நேற்றிரவு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரிலீஸான டாக்டர் படம் இதுவரை ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு மக்கள் திரையரங்குகளை வருவதை டாக்டர் படம் ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web