டாக்டர் படத்துக்கு தேதி குறித்த படக்குழு- வெளியானது அறிவிப்பு..!

 
டாக்டர் படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து  தயாரித்துள்ள படம் ‘டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுவிட்டன.

தமிழக சட்டசபை தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தேதி தள்ளிப்போய்கொண்டே இருந்தது. அப்போது படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்திட படக்குழு முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதற்கான முடிவை கைவிட்டுவிட்டு டாக்டர் படத்தை நேரடியாக திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். அதன்படி வரும் அக்டோபர் மாதம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web