நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு இப்படி ஒரு திறமையா? குவியும் பாராட்டுக்கள்..! 

 
1
‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் மெண்டல் மதிலோ, சித்ரலேகாரி, ப்ரோச்சேவரவருரோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் போட்டியிலும் கலக்கியுள்ளார். அதாவது, டால்பின் ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web