லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

 
1

கள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே, நந்தா, பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர், லைலா. இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவர் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர் என்பதும்,  திருமணத்திற்கு பின்னர் அவர் திரை உலகில் இருந்து விலகிய நிலையில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும் அதன் பிறகு தற்போது ’கோட்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லைலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது இரண்டு மகன்கள் உடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய மகன்களை பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? கூடிய சீக்கிரம் தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் கிடைத்து விடுவார்கள் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

From Around the web