பிரபல நடிகையின் அம்மாவுக்கு இப்படி ஒரு நோயா??

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை பக்கம் வந்தவர் தான் பிரியா பவானி ஷங்கர்.கல்யாணம் முதல் காதல் வரை என்ற அவரது முதல் தொடரிலேயே அழகாக நடித்து ரசிகர்களின் மனதில் சூப்பராக இடம் பிடித்தார்….அதன்பின் கேமரா பக்கம் வர மாட்டேன் என்றவர் திடீரென படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
மேயாத மான் தான் அவர் முதலில் நடித்த திரைப்படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்…அப்படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓமணப்பெண்ணே, யானை,திருச்சிற்றம்பலம், ருத்ரன் என தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் பிஸியான நாயகியாக வலம் வருகிறார்…அதிகமாக கொண்டாடப்படும் நடிகையாக மாறியுள்ளார்..
அதனை போல இந்தியன் 2, டிமாண்டி காலனி, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படம் என கலக்குகிறார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் அப்பல்லோ கேன்சர் செண்டர் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதில் சிறப்பு விருந்தினராக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கலந்துகொண்டார்.
அதில் அவர் பேசும்போது கடந்த ஆண்டு தனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதாகவும் அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் சரிசெய்துவிட்டதாகவும் கூறினார் இதை சொல்லும்போது எமோஷனல் ஆகிவிட்டார் அவர்.
எனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதும் சீக்கிரம் சரியாகிவிடும் என அவரிடம் அடிக்கடி சொல்லுவேன் என கூறிய பிரியா என் அம்மாவுக்கு கேன்சர் கண்டறியப்பட்டபோது டாக்டர் என்னையும் பரிசோதனை செய்துகொள்ள சொன்னார்கள்.நோய் வந்தால் கவலைப்படாமல் மருத்துவர்களை நம்புங்கள் என்றும் கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.