வெங்கட் பிரபுவுக்கு இந்த குசும்பு தேவையா? "லயன் இஸ் ஆல்வேஸ் லயன்"... வெளியான கோட் பட ட்ரைலர்..!
கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.நடிகர் விஜயுடன் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், சினேகா உட்பட பலர் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் காணப்படுகின்றது. சமீபத்தில் கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாக ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஷேர் ஷேர் என ஷேர் செய்துகொண்டு இருக்கின்றனர். கோட் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்தது என்று தான் சொல்ல வேண்டும். தர மாஸாக இருக்கிறது. அதில் தளபதி போலீஸ் ஏஜெண்டாக இருக்கிறார்.
ஷூட்டிங், பைட்டிங் என்று விறுவிறுப்பாக நகர்கிறது. இடையில் அவர் குடிப்பது போல காட்ச்சிகளும் வருகிறது. விஜயின் சிறுவது முகத்தினை al டெக்னோலஜி மூலம் கொண்டுவந்துள்ளனர். ஒரே பைட்டிங் மூட்டிலே ட்ரெய்லர் செல்கிறது. இதில் எவ்வளோ வயசானா என்னய்யா லயன் இஸ் ஆல் வேஸ் லயன் என்று முடிகிறது. இதோ இந்த ட்ரெய்லர் உங்களுக்காக..
2 நிமிடம் 52 நொடிகள் ஓடும் இந்த டைலரில் படக்குழு எல்லாருக்குமே முக்கியத்துவத்தை கொடுத்து காட்டியுள்ளது. அதிலும் பிரசாந்த் வாய்ஸில் தொடங்கும் இந்த படம் அவருக்கு இப்படத்தில் பலமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் படக்குழுவினரே இந்த முறை ஒரு பிரச்சனையை வம்பாக இழுத்து விட்டுள்ளார்கள். அதாவது இந்த படத்தில் விஜயின் பெயர் காந்தி. அவர் யாருடனோ தொடர்பில் இருப்பதாக சினேகா லைலாவிடம் சொல்லுகின்றார். அடுத்த காட்சியில் விஜய் ஒரு பெண்ணுடன் பப்பில் ஆடிக்கொண்டு உள்ளார். காந்தி வேஷம் போட்டு பார்த்திருக்கேன் காந்தியே வேஷம் போட்டு இப்பதான் பார்க்கிறேன் என மோகன் பேசும் ஒரு டயலாக்கும் இடம்பெற்றுள்ளது. இதனால் வெங்கட் பிரபுவுக்கு இந்த குசும்பு தேவையா? இந்த பெயரை வைத்து பிரச்சனையை ஆரம்பிக்காமல் இருந்தால் சரி தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.