டிசம்பர் மாத விடுமுறையை குறிவைக்கும் டான்..!
 

 
டான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடுவதற்காக படக்குழு விறுவிறுப்பாக உழைத்து வருகிறது.

டாக்டர் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணை தயாரிப்பாளராக உள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் ‘டான்’ படத்திற்கான உருவாக்க பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் துவங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டான் படம் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினத்தை தயாராகி வருகிறது. அதற்கான முனைப்பில் மொத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு தமிழக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

From Around the web